ஒடிசாவில் வினோதம்; புக் செய்த ஏசி கோச்சை காணவில்லை: பயணிகள் அதிர்ச்சி..!
Passengers were shocked to find that the AC coach they had booked in Odisha was missing
நேற்று ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டேட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக பிளாட்பார்ம் வந்தடைந்துள்ளது.
அப்போது பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏசி கோச் ஒன்று இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அங்கு குழப்பம் நிலவியுள்ளது. இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
குறித்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையை அடைந்த போது முன்பதிவு செய்யப்பட்ட 03 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த 57 பயணிகளுக்கு அவர்களின் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், குழப்பம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட BE2 ஏசி கோச்சை ரெயிலில் இணைக்க முடியவில்லை என்றும், இதனால் முன்பதிவு செய்த பயணிகளை ரெயிலில் காலியாக உள்ள மற்ற பெர்த்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்க வைத்தனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
Passengers were shocked to find that the AC coach they had booked in Odisha was missing