"வானில் 6 கோள்களின் அரிய அணிவகுப்பு!": நாளை அதிகாலை வெறும் கண்ணால் பார்க்கும் வாய்ப்பு - எந்த நேரத்தில் பார்க்கலாம்? - Seithipunal
Seithipunal


வானியல் ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் விருந்தளிக்கும் வகையில், சூரிய குடும்பத்தில் உள்ள 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய வானியல் நிகழ்வு நாளை அதிகாலை நிகழவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரம் மற்றும் திசை
காணக்கூடிய நேரம்: இந்த அரிய கோள்கள் அணிவகுப்பை நாளை அதிகாலை 4:45 மணி முதல் 5:30 மணி வரை காணலாம்.

பார்க்க வேண்டிய திசை: வானத்தின் கிழக்குத் திசையில் இந்த கோள்கள் வரிசையாகக் காட்சியளிக்கும்.

எந்தெந்த கோள்களை எப்படிப் பார்க்கலாம்?
வெறும் கண்களால் பார்க்கக்கூடியவை: வெள்ளி (Venus), வியாழன் (Jupiter), சனி (Saturn) மற்றும் செவ்வாய் (Mars) ஆகிய 4 கோள்களையும் எந்தவிதத் உபகரணமும் இன்றி வெறும் கண்களாலேயே தெளிவாகக் காண முடியும்.

தொலைநோக்கி தேவைப்படுபவை: நெப்டியூன் (Neptune) மற்றும் யுரேனஸ் (Uranus) ஆகிய 2 கோள்களைப் பார்ப்பதற்கு மட்டும் தொலைநோக்கி (Telescope) அவசியமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வானம் தெளிவாக இருக்கும்பட்சத்தில் பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rare Celestial Event 6 Planets to Align in the Sky Tomorrow Morning


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->