மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in central govt companies
மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தாரர்கள் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
சம்பளம்: இப்பதவிக்கு தேர்வுச் செய்யப்படும் நபர்களுக்கு முதல் வருடம் மாதம் ரூ.25,000 இரண்டாம் வருடம் ரூ.28,000, மூன்று மற்றும் நான்காம் வருடம் மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணி ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால் எழுத்துத் தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.09.2025.
English Summary
job vacancy in central govt companies