சேலத்தில் 5,000 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பு! பலத்த காவல் பாதுகாப்புடன் த.வெ.க. ஆலோசனை கூட்டம்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகிலுள்ள தாளமுத்து–நடராஜன் திடலில் உற்சாகமாக நடைபெற உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, கட்சித் தலைவர் விஜய் இன்று சேலம் வருகை தருகிறார்.

சென்னையில் இருந்து தனியார் விமானத்தில் காலை 11 மணியளவில் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் நேரடியாக கூட்டத் திடலுக்கு செல்கிறார். அவரது வருகையால் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 5,000 நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி,அனுமதி பெற்றவர்களுக்கே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என கட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், பாதுகாப்பு மற்றும் வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத் திடலைச் சுற்றி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நிர்வாகிகள் அமர்வதற்கான இருக்கைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் அவசர நிலைகளை சமாளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் தயார்நிலையில் இருக்கிறது.

பாதுகாப்பு பணிக்காக 600-க்கும் மேற்பட்ட காவலர்கள்  களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டம் சிறப்பாகவும் கட்டுப்பாடுடனும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5000 executives participate Salem TVC consultative meeting heavy police security


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->