இன்ப அதிர்ச்சி! 'திராவிட மாடல் 2.0’-ல் உரிமைத்தொகை...1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 முன்பணம்! -மு க ஸ்டாலின்
Dravidian Model 2point0 royalty amount 1point31 crore women get 5000 advance MK Stalin
தமிழக முதலமைச்சார் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு மகளிரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வழங்கப்படும் உரிமைத்தொகை தனது அரசின் உறுதியான வாக்குறுதி என்றும், எந்தத் தடையும் வந்தாலும் அந்தத் திட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், தேர்தலை காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உதவித்தொகையை நிறுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதற்கு முன்பே செயல்பட்டு திராவிட மாடல் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு உதவியாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் 1.31 கோடி பயனாளிகளின் கணக்கில் இன்று காலை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதுமட்டுமின்றி தமிழ்ப் பெண்களின் உறுதியான ஆதரவுடன் மீண்டும் வெற்றி நிச்சயம் என்றும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உரிமைத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என்பது என் சகோதரிகளுக்கான உறுதியான வாக்குறுதி என்றும் அவர் வலியுறுத்தினார்.“வெல்வோம்… ஒன்றாக!” என்ற முழக்கத்துடன் தனது பதிவை முடித்துள்ளார்.
English Summary
Dravidian Model 2point0 royalty amount 1point31 crore women get 5000 advance MK Stalin