தினமும் சண்டை.. ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி.!!
women killed husband in hydrabad
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணஜோதி போரா-பரகா போரா. இந்த தம்பதியினர் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் நர்சிங்கி, கோகோ பெட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்தது. அதன் படி நேற்று இரவு வழக்கம் போல் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அவரது மனைவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயமடைந்த கிருஷ்ண ஜோதி போரா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதையறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் கிருஷ்ண ஜோதி போராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கொலை செய்த மனைவி பரகா போராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women killed husband in hydrabad