மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதிய? - கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம்.!!
kallakurichi police explain madurai adheenam car accident
மதுரை ஆதீனம் கடந்த 2-ம் தேதி காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது, உளுந்தூர்பேட்டை - சேலம் சாலை ரவுண்டானா அருகே கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் சம்பவம் குறித்து தகலறிந்த போலீஸார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்குப் பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக ரவுண்டானா அருகே சென்றபோது, விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இந்த விபத்தில், மதுரை ஆதினம் பயணம் செய்த காரின் பின்புறம் சிறிய அளவில் சேதமும், மற்றொரு காரின் முன்புறம் சிறிய அளவிலான சேதமும் மட்டுமே ஏற்பட்டது தெரிய வந்தது.

இதற்கிடையில், தன்னைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இது கொலை இல்லை என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தெரிவித்துள்ளதாவது:- "சம்பவம் குறித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக மதுரை ஆதீனமோ, அவரைச் சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தவிதப் புகாரும் இதுவரைக்கும் கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
kallakurichi police explain madurai adheenam car accident