எல்லை மீறும் ஆர்சிபி ரசிகர்கள்: சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே- வுக்கு எதிராக நடந்த மோசமான சம்பவம்..!
Jersey in jail as a way of mocking CSK team at Chinnaswamy Stadium
நடப்பு ஐபிஎல் போட்டியில் 52-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சென்னை சூப்பர் கிங் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்யும் விதத்தில், ஜெர்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சிஎஸ்கே ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டி அந்த சீசன்களில் விளையாட சி.எஸ்.கே-வுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கிண்டல் செய்யும் விதமாக கருப்பு வெள்ளை (ஜெயில் ஜெர்சி) டீசர்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜெர்சியை ஆர்.சி .பி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர். இது மென்மேலும் சி.எஸ்.கே ரசிகர்களிடம் கோபத்தை தூண்டியுள்ளது.
English Summary
Jersey in jail as a way of mocking CSK team at Chinnaswamy Stadium