திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை பீதி! - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம், பக்தர்களுக்கு எச்சரிக்கை!
Leopard scare on Tirupati mountain trail Security measures intensified devotees warned
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி, பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில், அலிப்பிரி விநாயகர் கோவில் அருகே உள்ள கனுமா சாலையில் ஒரு சிறுத்தை சாலையை கடந்தது. அந்த நேரத்தில் நடைபாதையில் சென்ற பக்தர்கள் இதைக் கண்டு பயந்து ஓடினர்.

இந்த சம்பவத்தையடுத்து பக்தர்கள் திருமலை தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை பரிசோதித்தபோது, சிறுத்தை நடமாட்டம் உறுதிசெய்யப்பட்டது.இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான பாதுகாப்பு படையினர் இணைந்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தையை பாதுகாப்பாகப் பிடிக்க சிறப்பு கூண்டுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் சில வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர்:
வன விலங்குகள் அருகே செல்ல வேண்டாம்.
குழந்தைகளை கவனமாக அழைத்து செல்ல வேண்டும்.
கூட்டமாக நடைபாதையில் நகர வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்று மட்டும் திருப்பதியில் 66,675 பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர். 24,681 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.3.32 கோடி என பதிவானது. நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
English Summary
Leopard scare on Tirupati mountain trail Security measures intensified devotees warned