ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்..! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல், ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் பதில் தாக்குதல் என உலகின் பெரும் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.

இந்த சூழலில்,  ஈரான் மீது ஏவப்பட்ட மூன்று அமெரிக்க F15 போர் விமானங்களை குவைத் வான் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. 

இந்த விமானங்களில் இருந்த 06 விமான ஓட்டிகளும், பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் பதில் தாக்குதல் முயற்சியின் போது, இந்த விமானங்கள் தவறுதலாகத் தாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை ஒரு விபத்து என குவைத் ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக இருதரப்பும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேல்-அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகள் நிலைகுலைந்து போயுள்ளன. இதனால் பொது மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kuwait mistakenly shoots down US warplanes in retaliation for Iran attack


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->