திமுக அரசு அலட்சியம்! விவசாயிகள் வறுமையில் நெல் சுருங்கும் நிலை!- பா.ஜ.க. மாநில தலைவர் அதிரடி குற்றச்சாட்டு
DMK governments negligence Farmers are suffering from poverty paddy shrinking BJP state leader makes sharp accusation
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும்," மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகள் நியாயமான விலையில் நெல் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

மேலும், பருவமழையும் தீபாவளிப் பண்டிகையும் முன்கூட்டியே கணக்கிட்டு, அரசு நிர்வாகம் உரிய திட்டமிடல் செய்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்பதற்கே பதிலாக, அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்துவிட்டதால் இது திமுக அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.
"டெல்டாக்காரன்" என்று பெருமிதம் கொள்வது உண்மை என்றால், உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து அவர்களின் நலனைக் காத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
English Summary
DMK governments negligence Farmers are suffering from poverty paddy shrinking BJP state leader makes sharp accusation