வாக்காளர் பட்டியல் அப்டேட்...! 5 மாநிலங்களில் இன்று வரைவு வெளியீடு...!
Voter list update Draft release 5 states today
தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) ஒரே மாதத்தில் நிறைவு செய்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான்–நிகோபார், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளிலும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன. 2002–2005 காலத்திற்குப் பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, படிவங்கள் முழுவீச்சில் விநியோகிக்கப்பட்டன.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை சேகரித்து, அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்குவங்கம், கோவா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. பட்டியல் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
பெயர் தவறுகள், இடமாற்றம், போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19-ந் தேதி வெளியிடப்படும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது.
English Summary
Voter list update Draft release 5 states today