இடி, மின்னலுடன் மழை…! மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களுக்கு அலர்ட்...!
Thunderstorms lightning and rain Alert 15 districts until 1 pm
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வானிலை மாற்றம் காணப்படுகிறது.
இதன் தாக்கத்தால், இன்று தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,அரியலூர், செங்கல்பட்டு,தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Thunderstorms lightning and rain Alert 15 districts until 1 pm