கண்ணழகி கனகாவா இது? வைரலான புதிய புகைப்படம்! அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை கனகா!
Is this Kannazhagi Kanaka New viral photo Actress Kanaka has transformed beyond recognition
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்த நடிகை கனகா, கடந்த பல ஆண்டுகளாக பொதுவெளியில் தோன்றாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தனது தாய் மற்றும் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மறைவுக்குப் பிறகு, மனதளவில் கடும் பாதிப்பை சந்தித்த கனகா வீட்டை விட்டு வெளியே வராமல் ஊடகங்களின் பார்வையிலிருந்தும் விலகி இருந்தார்.
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கனகா, முதல் படத்திலேயே திறமையான நடிகையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் தங்கமான ராசா, பெரிய வீட்டுப் பண்ணக்காரன், கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சாமுண்டி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிசயப் பிறவி படத்தில் நடித்ததன் மூலம் கூடுதல் புகழ் பெற்றார். மலையாளத்தில் நடித்த காட்ஃபாதர் திரைப்படம் 400 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
ரஜினி, பிரபு, மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்த கனகா, தாயின் மறைவுக்குப் பிறகு சினிமாவிலிருந்தும் சமூக வாழ்விலிருந்தும் முழுமையாக ஒதுங்கினார். சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தபோது, உடல் எடை அதிகரித்து இருந்த கனகாவின் தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் தற்போது கனகாவின் இன்னொரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த படத்தில் தலையில் துணி கட்டி, நெற்றியில் பெரிய பொட்டு, கூலிங் கிளாஸ் அணிந்த நிலையில் கனகா காணப்படுகிறார். அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ள அவரது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், “ஒருகாலத்து கண்ணழகி கனகாவா இது?” என்று வேதனையுடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Is this Kannazhagi Kanaka New viral photo Actress Kanaka has transformed beyond recognition