டாப் குக் டூப் குக் 2 டைட்டிலை தட்டிதுக்கிய பெசண்ட் ரவி.. பரிசுத்தொகை இத்தனை லட்சமா? எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சியில் மீடியா மேசன்ஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வந்த டாப் கூக்கு டூப் குக்கு சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் டைட்டில் வின்னராக பெசண்ட் ரவி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்தது.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக உருவான டாப் கூக்கு டூப் குக்கு நிகழ்ச்சி, முதல் சீசனிலேயே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தொடங்கிய இரண்டாம் சீசனில் நடிகை கிரண், ஷிவானி நாராயணன், பிரியங்கா, ரோபோ சங்கர், TSR, இலங்கை தமிழ் ராப் பாடகர் வஹீசன், ஸ்டண்ட் மாஸ்டர் பெசண்ட் ரவி உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். டூப் குக்குகளாக தீனா, அருண், ஜி பி முத்து, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடுவராக வெங்கடேஷ் பட் மற்றும் ராம்மோகன் செயல்பட்டனர்.

போட்டியின் முழுக்க தனது சமையல் திறமையை வெளிப்படுத்திய பெசண்ட் ரவி, ஒவ்வொரு வாரமும் தனித்துவமான உணவுகளை தயாரித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நடிகராக மட்டுமல்லாமல், சென்னையில் ஹோட்டல் நடத்தி வரும் அவர், தன்னுடைய அனுபவத்தை நிகழ்ச்சியில் சிறப்பாக பயன்படுத்தி பைனல் வரை முன்னேறி டைட்டிலை கைப்பற்றினார். அவருக்கு ஸ்டார் ஆஃப் சீசன் 2 என்ற பட்டமும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட்டன.

வெற்றியைத் தொடர்ந்து பெசண்ட் ரவி தனது சமூக வலைதளப் பதிவில், இந்த பயணம் அர்ப்பணிப்பு, வியர்வை மற்றும் தனது வேர்களின் சுவையால் உருவானது என்றும், கோப்பையுடன் சேர்த்து பல பாடங்களையும் நினைவுகளையும் பெற்றதாகவும் குறிப்பிட்டு, தயாரிப்பு நிறுவனம், நடுவர்கள் மற்றும் சக போட்டியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Besant Ravi who won the title of Top Cook Doop Cook 2 Is the prize money worth this much Do you know how much


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->