"நீ எனக்கா பிறந்த..என்னை அப்பா என்று கூப்பிடாதே" என்ற இளையராஜா! உடைந்து கதறி அழுத மிஷ்கின் கதை தெரியுமா?!
You were born to me donot call me father said Ilayaraja Do you know the story of Mysskin who broke down and cried
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் மிஷ்கின், இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர். இளையராஜாவை அவர் எப்போதும் அப்பா என்று அழைப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக உள்ளது. நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற படங்களை இளையராஜாவின் இசையில் இயக்கியுள்ள மிஷ்கின், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற வித்தியாசமான படங்களால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். இயக்குநராக மட்டுமல்லாமல், லியோ, மாவீரன், வணங்கான், டிராகன் போன்ற படங்களில் நடிகராகவும் கவனம் ஈர்த்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திலும், விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ட்ரெயின் படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில், இளையராஜாவுடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நினைவுகூர்ந்த மிஷ்கின், ஒரு பாடல் தொடர்பாக இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாக கூறினார். அந்த நேரத்திலும் அவர் இளையராஜாவை அப்பா என்று அழைத்துக் கொண்டே இருந்ததாகவும், அதற்கு இளையராஜா என்னை அப்பா என்று கூப்பிடாதே, நீ என்ன எனக்குப் பிறந்தவனா என்று கேட்டதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகள் தன்னை ஆழமாக பாதித்ததாக கூறிய மிஷ்கின், அன்றைய தினம் ஒரு மணி நேரம் அங்கேயே நின்று உடைந்து அழுததாகவும், அந்த அளவுக்கு மனம் வலித்தது அதுவே முதல் முறை என்றும் உருக்கமாக கூறினார்.
English Summary
You were born to me donot call me father said Ilayaraja Do you know the story of Mysskin who broke down and cried