திருப்பூர் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து; பல லட்சம் லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் அக்ரஹாரபுத்தூர் பகுதியை சேர்ந்த பஷீர் அராபத் என்பவர் வாடகைக்கு கட்டிடம் எடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக கழிவுப்பஞ்சுகளை அரைத்து நூல் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.

இன்று குறித்த ஆலையில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென கழிவு பஞ்சுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ பற்றியுள்ளது. முழுவதுமாக பரவியா தீயினால் கழிவு பஞ்சுகள் மற்ற பஞ்சுகள் மற்றும் எந்திரங்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளன. இதன் போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதலாக தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் தீப்பற்றியதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden fire at Tiruppur cotton factory goods worth lakhs of rupees were burnt and destroyed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->