கழிவறையில் மாணவி பாலியல் பலாத்காரம்..கல்லூரி மாணவர் கைது! - Seithipunal
Seithipunal


கல்லூரி கழிவறையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்த  ஜூனியர் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு பசவனகுடி புல்டெம்பிள் சாலையில் செயல்பட்டுவரும் பி.எம்.எஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் 22 வயது இளம்பெண் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ஜீவன் கவுடா என்பவர் கடந்த 10-ந் தேதி அன்று காலை  இளம்பெண்ணை சந்தித்த ஜீவன் கவுடா, "மதியம் உங்களை சந்திக்க வேண்டும், எனக்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது, அதை உங்களிடம் இருந்து நான் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் தயக்கத்துடன் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மதியம்மதிய உணவு இடைவேளையின்போது கல்லூரி வகுப்பறை கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த இளம்பெண்ணை, ஜீவன் கவுடா மீண்டும், மீண்டும் தொடர்ந்து அழைத்துபோது மேலும் இங்கு வைத்து சந்திக்க வேண்டாம், 7-வது மாடியில் உள்ள கட்டிடக்கலை துறை பிரிவு அருகே வைத்து சந்திக்கலாம் என்று கூறி இளம்பெண் அழைத்துள்ளார். 

அப்போது அங்கு கட்டிடக்கலை துறை அருகே வைத்து இளம்பெண்ணை சந்தித்த ஜீவன் கவுடா, அவருக்கு திடீரென முத்தமிட முயற்சித்துள்ளார். அப்போது இளம்பெண்ணை பிடித்து வலுக்கட்டாயமாக ஜீவன் கவுடா முத்தம் கொடுத்துள்ளார். அதையடுத்து அவரை தள்ளிவிட்டுவிட்டு இளம்பெண் உடனடியாக லிப்ட்டுக்குள் ஏறினார்.

மேலும் அவர் 6-வது மாடிக்கு சென்ற இறங்கி வந்த ஜீவன் கவுடா, லிப்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை குண்டுக்கட்டாக பிடித்து அருகே இருந்த ஆண்கள் கழிவறைக்குள் தள்ளி உட்புறமாக பூட்டிக்கொண்டார். 

பின்னர் இளம்பெண்ணை பலவந்தமாக ஜீவன் கவுடா பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் இளம்பெண்ணின் செல்போனை அங்கே தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் சம்பவத்தால் நிலைகுலைந்த இளம்பெண், அங்கிருந்து மெதுவாக எழுந்து வந்து தனது தோழிகளை சந்தித்து நடந்தவற்றை கூறினார். அவர்கள் இதுபற்றி பெற்றோரிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் அவமானம் மற்றும் பயம் காரணமாக இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி அனுமந்தநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இதுபற்றி பி.என்.எஸ். சட்டம் பிரிவு 64-ன் (பாலியல் பலாத்காரம்) கீழ் வழக்குப்பதிவு செய்து ஜீவன் கவுடாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student raped in toilet College student arrested


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->