சர்ச்சை பேச்சு! சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை...! - காங்கிரஸ் எம்.பி சரஞ்சித் சிங் சன்னி - Seithipunal
Seithipunal


தெற்கு காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தானின் பயங்கரவாத துப்பாக்கிச் சூடு தாக்குதலில் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தற்போது நிலவுகிறது.இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான 'சரண்ஜித் சிங் சன்னி' செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார்.

சரண்ஜித் சிங் சன்னி:

அப்போது அவர் தெரிவிக்கையில், "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் மக்களை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். வாகா எல்லையை மூடிவிட்டனர். சிந்து நதி நீரை இந்தியாவால் நிறுத்த முடியாது.

அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும்.நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாம் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்... எதுவும் நடக்கவில்லை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்கவில்லை.

இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.இந்தக் கருத்தில், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் இல்லை' என்று 'சரஞ்சித் சிங் சன்னி' தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no evidence that surgical strikes took place Congress MP Saranjit Singh Sunny Controversial talk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->