VJ சித்துவின் முதல் படம் 'டயங்கரம்'...! promo வெளியிட்ட தனுஷ்...!
VJ Sidhu first film Dayangaram Dhanush releases promo
VJ சித்து VLOGS ,பிரபலமான தமிழ் யூடியூப் சேனலில் முக்கிய பங்கு வகிக்கும்.இவர்களின் வீடியோ அனைத்துமே மில்லியன் வியூஸ்களை அள்ளும். பல இளைஞர்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இவர்களது வீடியோக்கள் இருப்பதால் மக்கள் இதனை கொண்டாடி ரசித்து வருகின்றனர்.

அண்மையில், சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இவர்களது கதாப்பாத்திரத்தை மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.இந்த நிலையில், அடுத்ததாக VJ சித்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவரே 'டயங்கரம்' படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
மேலும், இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.அதுமட்டுமின்றி, படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தற்பொழுது 'டயங்கரம்' ப்ரோமோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
தற்போது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இதில் குறிப்பாக, ப்ரோமோ வீடியோவை நடிகர் 'தனுஷ்' அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர்,' VJ சித்துவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் சினிமா உலகத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
VJ Sidhu first film Dayangaram Dhanush releases promo