வீட்டு ஓனருடன் கள்ளக்காதல்... வீடியோ கால் செய்துவிட்டு கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!
UP affair suicide Video Call
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த தல்சந்த் அகிர்வார் (35) என்ற இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது மனைவி ஜாங்கி, 8 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தல்சந்த், அரியானாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய தல்சந்த், தனது மனைவி வீட்டு உரிமையாளருடன் தனிமையில் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜாங்கி கோபமாக தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர் தல்சந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. மனமுடைந்த தல்சந்த், அக்டோபர் 31 அன்று ஜாங்கியுடன் வீடியோ கால் மூலம் உருக்கமான உரையாடல் நடத்தினார். “நான் மூன்று நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறேன், ஆனால் முடியவில்லை. நீ ஒருமுறை கூட என்னோடு பேசியிருந்தால் இப்படி நடந்திருக்காது. எனக்கு செய்த துரோகம் யாருக்கும் செய்யாதே,” என்று கூறி அழைப்பை முடித்தார்.
அன்றைய மாலை, தல்சந்தின் சகோதரர் சந்தர்பன் அவரை பார்க்க வீட்டிற்கு வந்தபோது, தல்சந்த் மயங்கி கிடந்தார்; அருகில் விஷ பாட்டிலும் இருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது தல்சந்த் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். சந்தர்பன், தல்சந்தின் மனைவி மற்றும் வீட்டு உரிமையாளரை குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், ஜாங்கியின் குடும்பம் “தல்சந்த் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியை அடிப்பார்” என விளக்கம் அளித்துள்ளது.
தற்போது தல்சந்தின் வீடியோ கால் பதிவின் உண்மைத் தன்மையை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
English Summary
UP affair suicide Video Call