கேரளா: ஓடும் சிறையிலிருந்து இளம்பெண்க்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய கொடூரம்!
Aluva station train young woman
கேரளாவின் வர்கலா ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்ட கேரளா எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் பயணித்துக் கொண்டிருந்தது. அந்த ரயிலில் 19 வயது இளம் பெண் ஸ்ரீகுட்டி தனது தோழியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த சுரேஷ் குமார் (48) என்ற நபர் திடீரென அவர்களை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
சில நிமிடங்கள் கழித்து, ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது அந்த நபர், ஸ்ரீகுட்டியை வலுக்கட்டாயமாக தள்ளி ரயிலில் இருந்து கீழே வீழ்த்தியுள்ளார். அதன்பின் அவரது தோழியையும் தள்ள முயன்றுள்ளார். ஆனால், மற்ற பயணிகள் சத்தம் கேட்டு விரைந்து சென்று தடுக்க, அவர் மயிரிழையில் தப்பினார்.
உடனே பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பலத்த காயமடைந்த ஸ்ரீகுட்டி முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளி சுரேஷ் குமாரை திருவனந்தபுரம் அருகே கைது செய்தனர்.
அலுவா ரயில் நிலையத்திலிருந்து தனது தோழியுடன் ரயிலில் ஏறியிருந்ததாக போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் உயிர் பிழைத்தாலும், அவரது உடல்நிலை தீவிரமாக உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அராஜகச் சம்பவம் கேரளா முழுவதும் மக்களின் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Aluva station train young woman