என்னை விட்டு அவர் தான் முதல்ல போயிட்டாரு...! அவர்தான் உண்மையான விண்வெளி நாயகன்...! - கமல்ஹாசன்
He first to leave me He real space hero Kamal Haasan
தமிழ் திரையுலகில் தலைச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் , நாடக எழுத்தாளர் மற்றும் நடிகராக இருந்தவர் 'கிரேசி மோகன்'. இவர் நகைச்சுவை வசனங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ள இவர்,கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் காலமானார்.

மேலும், கிரேஸி மோகன், கமல்ஹாசன் இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் 'சூப்பர் டூப்பர் ஹிட்' ஆகியுள்ளது. இதுவரை இவர்கள் கூட்டணியில் உருவான பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜ், தெனாலி, வசூல் ராஜா MBBS, பம்மல் கே சம்பந்தம், ஆகியவை சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள்.
இந்த நிலையில், நேற்று கிரேசி மோகன் எழுதிய நாடகங்கள், வசனங்கள், சிறு கதைகள் என மொத்த 25 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை வெளியிட்டனர். அந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
கமல்ஹாசன்:
மேலும், அதில் கமல்ஹாசன் கிரேசி மோகன் குறித்து தெரிவித்ததாவது," நானும் அவரும் வெவ்வேறு வீட்டில் பிறந்த இரு சகோதரர்கள். நாங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தினம் தோறும் பேசிக்கொள்வோம். நானும் அவரும் பேசிய கதைகள் பல.
அவை அனைத்தும் வெற்றி திரைபடங்கள் தான். எனக்கு முன்னாடி விண்வெளி நாயகனாக ஆனவர் மோகன் அண்ணா தான். என்னை விட்டு அவர் தான் முதல்ல போயிட்டாரு.
எல்லாரும் ஒரு நாள் போய் தான் ஆகனும். எதாவது டிராமா பார்க்கனும்னா அங்க வந்து பாருங்க" என்று மிகவும் நகைச்சுவையாக தெரிவித்தார்.இது அங்கிருந்த பலருக்கும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
English Summary
He first to leave me He real space hero Kamal Haasan