அய்யயோ!!! 2 மாதங்களுக்கான உணவு மற்றும் மருந்து பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்...!!!
Stock up on food and medicine for 2 months
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்தது.
மேலும், பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 % வரை இந்தியாவை நம்பியுள்ளது. இதில் தற்போது இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தியதால் மருந்து பற்றாக்குறையில் சிக்கும் அபாயத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக மருந்து விநியோகத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் 'அவசர' நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிலடிக்கு பயந்து, எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டில் இருக்கும் 13 தொகுதிகளில் 2 மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, பாகிஸ்தான் ராணுவம் உள்ளூர் கிராம மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Stock up on food and medicine for 2 months