பயங்கர விபத்து! மின்கம்பியால் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்தது...! இருவர் உயிரிழப்பு, 12 பேர் காயம்...! நடந்து என்ன...? - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இன்று காலை பயங்கரமான விபத்து ஒன்று நடந்தது. 15-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த ஆம்னி பஸ், நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

மேலும், பேருந்தின் மேற்கூரையில் பெருமளவில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், தாழ்வாக சென்ற மின்கம்பி திடீரென அறுந்து பஸ்சின் மீது விழுந்தது.

அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் மின்கம்பி பஸ்சை தொடந்தவுடன் முழு வாகனமும் தீப்பற்றி மளமளவென எரிந்தது.இந்த சம்பவத்தை உணர்ந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகளை வெளியேறச் செய்தார்.

ஆனால் தீ வேகமாக பரவியதால், இருவர் தீக்கிரையாகி உயிரிழந்தனர், மேலும் 12 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இதில் முதற்கட்ட விசாரணையில், பஸ்சின் மேற்கூரையில் இருந்த எரிபொருள் மற்றும் வாயு சிலிண்டர்களே தீ பரவுவதற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrible accident Omni bus caught fire due to electric wire Two dead 12 injured What happened


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->