அட்ராசக்க...! அப்போ மாநில அளவிலான கூடைப்பந்து வீராங்கனை...இப்போ 300 கோடி வசூல் ஹீரோயினா...?
Then state level basketball player now 300 crore grossing heroine
சிறுவயதில் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் வியர்த்தவர், இன்று வெள்ளித்திரையில் வெற்றியை வியப்பாகப் பெற்றவர் — அவர் ‘அனுமான்’ படத்தின் நாயகி அம்ரிதா ஐயர்.ஒருகாலத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து வீராங்கனையாக விளங்கிய அம்ரிதா, தனது விளையாட்டு ஆர்வத்தைப் பின்பற்றி பல போட்டிகளில் கலந்துகொண்டார்.

ஆனால், நடிப்பின் மீது ஏற்பட்ட காதல் அவளை திரை உலகுக்கே அழைத்துச் சென்றது.மேலும், துணை வேடங்களில் தொடங்கி, திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அம்ரிதா, இன்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நாயகியாக உயர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ‘அனுமான்’ படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது அவரின் திரையுலக பயணத்தில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது.
தமிழில் ‘படைவீரன்’ மூலம் அறிமுகமான அவர், தெலுங்கில் ‘ரெட்’ மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘காளி’, ‘லிப்ட்’, ‘பிகில்’ போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
English Summary
Then state level basketball player now 300 crore grossing heroine