ஒட்டுமொத்த உலகமும் ஆந்திராவை நோக்கி பார்க்கும் வகையில் யோகா தினத்தில் உலக சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்..!
The entire world should look towards Andhra Pradesh and create a world record on Yoga Day Prime Minister Modi insists
ஆந்திர மாநிலம் அமராவதியில் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அங்கு நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசும்போது கூறியதாவது, ஆந்திரா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சிக்கான சரியான வேகத்தில் செல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் முக்கிய நிகழ்ச்சியான ஜூன் 21-ஐ சர்வதேச யோகா நாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்த ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் மக்களுக்கு நான் நன்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும்,யோகா தினத்தில் ஆந்திர பிரதேசத்தில் தான் யோகா பயிற்சியை மேற்கொள்வேன் என்றும், சர்வதேச யோகா தினத்தின் 10 ஆண்டுகால பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது என்றும், இந்த முறை ஒட்டுமொத்த உலகமும் ஆந்திராவை நோக்கி பார்க்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், யோகாவுக்கான ஆர்வத்துடன் கூடிய சூழலை, அடுத்த 50 நாட்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என தான் விரும்புவதாகவும், இதற்காக போட்டிகள் நடத்தப்பட வேண்டும் எனவும், யோகாவில் உலக சாதனை ஒன்றை ஆந்திர பிரதேசம் படைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதில் நீடித்த செயல்பாடு இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அவர்களுடன் தோளோடு தோள் நிற்பேன் என்றும் மக்களுக்கு ஈடு இணையற்ற ஆதரவை வழங்குவேன் என்றும் மோடி பேசியுள்ளார்.
English Summary
The entire world should look towards Andhra Pradesh and create a world record on Yoga Day Prime Minister Modi insists