தவெக மாநாட்டு திடலில் சாய்ந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம் - தொண்டர்களின் நிலை என்ன?
100 foot tvk flag pole falls in conference place
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை நடக்கிறது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில், மதுரையில் த.வெ.க. மாநாடு நடைபெற உள்ள இடத்தில் நடப்பட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் கிரேன் மூலம் நடப்பட்டபோது, திடீரென சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் ஒன்று பலத்த சேதம் அடைந்துள்ளது.
ஆனால், எதிர்பாராதவிதமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
100 foot tvk flag pole falls in conference place