மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகை பிரீத்தி முகுந்தன்...! யார் hero தெரியுமா?
Actress Preethi Mukundan making her debut Malayalam Do you know who hero
தெலுங்கு திரையுலகில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையுலகில் அறிமுகமானவர் 'பிரீத்தி முகுந்தன்'. இதைத்தொடர்ந்து, தமிழில் நடிகர் 'கவின்' நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருந்தார்.

இதனினும் உச்சமாக தற்போது இவர் 'மைனே பியார் கியா' என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகி இருக்கிறார்.இப்படத்தில், hero வாக அண்மையில் வெளியான திரில்லர் படமான 'முரா' படத்தில் நடித்திருந்த 'ஹிருது ஹாரூண்' நடித்திருக்கிறார்.
மேலும், பைசல் பாசிலுதீன் இயக்கி உள்ள இப்படத்தில், அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாப் சலீம் ஆகியோர் முக்கிய role -களில் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 29 -ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே,மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து 2 -வது பாடலாக 'மனோகரி' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.
English Summary
Actress Preethi Mukundan making her debut Malayalam Do you know who hero