மிரட்டி கல்யாணம் பண்ண நீ என்ன குழந்தையா ரங்கராஜ்? உடலுறவும் பிளாக்மெயிலா? கண்ணீருடன் விளாசி விட்ட ஜாய் கிரிசல்ட்டா!
What kind of child are you Rangaraj to force you to marry Is it sex and blackmail Joy Crisalta burst into tears
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசல்ட்டா பிரச்சனை கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக விவாதமாக இருந்து வந்தது. சமீபத்தில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்த நிலையில், இன்று (நவம்பர் 5) ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கை மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் ரங்கராஜ், “ஜாய் கிரிசல்ட்டா என்னை மிரட்டி தான் திருமணம் செய்து கொள்ள வைத்தார்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு பதிலாக ஜாய் கிரிசல்ட்டா இன்று இரண்டு வீடியோக்களை வெளியிட்டு கடும் ஆவேசமாக பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:“மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நான் பேச விரும்புகிறேன். விசாரணையின் போது அவர் தெளிவாக ‘அந்த குழந்தை என்னுடையதுதான், டி.என்.ஏ டெஸ்ட் தேவையில்லை’ என்று கூறினார். தனது குடும்பத்தினரின் அறிவுடனேயே என்னைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்களே ‘இந்தக் குழந்தை ரங்கராஜின் குழந்தை இல்லை’ என்று பரப்புகிறார்கள். இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எங்கே போயிருந்தார்கள்?”
அவர் மேலும் உணர்ச்சிவசப்படச் சொன்னார்:“என் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு அப்பாவாக இப்படிப் பட்ட பொய்யான அறிக்கை வெளியிட்டது அந்தக் குழந்தையின் சாபமாக மாறும். அந்த சாபம் அவரை விடாது. விசாரணையில் சொன்னதற்கு எதிராக இன்று எப்படி அவர் பேசுகிறார்? அவரை யாரோ மிரட்டுகிறார்கள் போல உள்ளது.”
தொடர்ந்து அவர் மேலும் கூறினார்:“விசாரணையில் அவர் சொன்னது — ‘என் முதல் மனைவியை அறைக்கு வெளியே வைத்துக் கொண்டுதான் இதைச் சொல்கிறேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு கிடைத்த நல்ல உறவு ஜாய் கிரிசல்ட்டா. அவர் மாதிரி யாரும் என்னைப் பார்த்துக்கொள்ளவில்லை’ என்று. அதைச் சொன்னவர் இப்போது என்னை மிரட்டி திருமணம் செய்துக்கொண்டேன் என்று சொல்கிறார். நான் மிரட்டியா அவர் அப்போது இப்படிச் சொன்னார்?”
அவர் மேலும் அதிரடியாகக் கூறினார்:“என்னிடம் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றை வெளியிட்டால் யார் யாரை மிரட்டினார்கள் என்பது உலகத்துக்குத் தெரிந்துவிடும். ‘பிளாக்மெயில்’ என்றால், உடலுறவு வைத்தது பிளாக்மெயிலா? அதைப் பற்றிச் சொல்லாதது ஏன்? ஏனென்றால் அது அவரின் விருப்பம். ஆம்பிளையாக இருந்தால் நீதிமன்றத்துக்குச் சென்று டி.என்.ஏ டெஸ்ட் செய்யட்டும். குழந்தையைப் பெற்ற எல்லா தாய்மார்களையும் கடவுளாகவே பார்க்கிறேன்.”
இவ்வாறு கண்ணீருடன் கூறிய ஜாய் கிரிசல்ட்டாவின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் பலரும் ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டா தரப்பினரை ஆதரித்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு அறிக்கை – ஜாயின் எதிர்வீடியோ — இதனால் இந்த வழக்கு மீண்டும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் சூடுபிடித்துள்ளது.
English Summary
What kind of child are you Rangaraj to force you to marry Is it sex and blackmail Joy Crisalta burst into tears