கோவையில் இன்ஸ்டா காதல் துயரக் காதலாக மாறியது...! -மாணவி மீதான வன்முறைக்கு போலீசின் அதிரடி நடவடிக்கை...! - Seithipunal
Seithipunal


மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி முதுகலை படித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் அறிமுகமான காதலனுடன் விமான நிலையம் பின்புறக் காட்டுப் பகுதியில் காரில் பேசிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் வந்த மூவர் காரை முற்றுகையிட்டனர்.

காதலனை அரிவாளால் தாக்கி மயக்கமடையச் செய்து, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.பின்னர் மயங்கி விழுந்த மாணவி, விழித்தெழுந்ததும் அருகிலிருந்த வீடுகளில் உதவி கேட்டார். அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காதலன் போலீசை தொடர்பு கொண்டதால் தேடுதல் தீவிரமாயிற்று.

போலீசார் அங்கு விடப்பட்ட திருட்டு மொபட் மற்றும் காதலனிடம் பறிக்கப்பட்ட செல்போன் வழியாக குற்றவாளிகளை கண்டறிந்தனர். விசாரணையில் சதீஷ் எனும் கருப்பசாமி (30), கார்த்தி எனும் காளீஸ்வரன் (20), குணா எனும் தவசி (20) ஆகிய மூவரே குற்றவாளிகள் எனத் தெரியவந்தது.

அவர்கள் சத்தியமங்கலம் அருகே பதுங்கியிருந்த இடத்தில் போலீசார் விரைவாக சென்று சுட்டுப்பிடித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காதலன், பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Insta love turned into tragic love in Coimbatore Police take action against violence against student


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->