கடைசி பந்துவரை திரில்லிங்; குஜராத்தை 06 ரன்களில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி; புள்ளி பட்டியலில் முதலிடம்..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2026 தொடரின் 09-வது லீக் ஆட்டம், இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை 06 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை திரில்லராக சென்ற இந்த போட்டியில், 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள்  எடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது.

குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (55), வைபவ் சூர்யவன்ஷி (31) ஜோடி 70 ரன்கள் சேர்த்து அதிரடித் தொடக்கம் அளித்தது. 

அடுத்து களமிறங்கிய துருவ் ஜுரெல் தனது அதிரடியான ஆட்டத்தால் 42 பந்துகளில் 75 ரன்கள் என அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை.அவருக்குப் பதிலாக ரஷீத் கான் அணியை வழிநடத்தினார். 211 என்ற இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் அரைசதம் கடந்து 73 ரங்களில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் (26) மற்றும் ராகுல் திவேட்டியா (12) என் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்ம் கடைசி ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார்.  அந்த ஓவரில் குஜராத் வீரர்களால் 04 ரன்கள் மட்டுமே கடைசி பந்தில் -7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரன் ஏதும் எடுக்க முடியாமல் போகவே ராஜஸ்தான் அணி 06 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அணியின் சார்பாக ரவி பிஷ்ணோய் 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan Royals secure a magnificent victory defeating Gujarat by 6 runs


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->