'மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'; எடப்பாடி பழனிசாமி உறுதி..! - Seithipunal
Seithipunal


அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்  கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் மீது சட்டரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மையிருந்தால் அதிமுக அரசு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் என்று  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து, மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேவூர் பகுதியில் குழுமியிருந்த மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது; முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் கோபத்தைக் கக்குவதோடு, தனது எரிச்சலை வெளிப்படுத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக இபிஎஸ் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதாக அவர் கூறியதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இபிஎஸ், நான் பேசியதை ''நன்கு கேளுங்கள். உங்கள் கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். உங்கள் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவிடம் காட்டுங்கள். அவர்தான் ஆடியோவில் ஒரு செய்தி சொன்னார். அது இந்திய அளவில் வைரலாகிறது. அதைத்தான் நான் சொன்னேன். என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? ஆ.ராசா மீது கோபப்பட்டால் உண்மையைச் சொல்லிவிடுவார் என்பதால் பயம்.'' என்று மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

அத்துடன், ஆ.ராசா சொன்னதை தான் நான் சொன்னேன். அப்பாவை சிறையில் அடைப்பது நியாயமா..? என்று கேள்வி எழுப்பியதோடு, உங்களை ஆளாக்கி இந்தியாவே உங்களை பாராட்டுகின்ற அளவுக்கு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர், செயல் தலைவர் ஆக்கினாரே. அதற்காக உங்கள் தந்தையை வீட்டுச் சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொல்கிறார். அழகிரியும் இதையேதான் சொல்றார் என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும், ஆ.ராசா உண்மையைச் சொன்னால் இருக்கும் இடம் வேறாக மாறிவிடும் என்றும், ஸ்டாலின் பேசப்பேச அது, உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், அண்ணனை ஒதுக்கிவிட்டீர்கள், தங்கையை மாநில அரசியலுக்கு வராமல் தடுத்துவிட்டீர்கள். உங்க அப்பா கடைசி வரை உங்களுக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் நீங்கள் என்று மு.க.ஸ்டாலின் கருணாநிதி இருக்கும்போது அவரின் அரசியல் நிலை குறித்து பேசியுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆ.ராசா ஆடியோ செய்தியை விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். எங்கள் அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) இறந்தபோது 

2021 தேர்தலில் 22-வது வாக்குறுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து கழக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்று அறிவித்திருந்தீர்கள். இப்போது நான் சொல்கிறேன், கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மையிருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். அவரும் முன்னாள் முதல்வர்தானே. தந்தைக்கே இந்த கதி என்றால் நாட்டு மக்களுக்கு என்ன கதி என்று எண்ணிப்பாருங்கள் என்று ஆவேசமாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami assures that legal action will be taken against those who placed Karunanidhi under house arrest once the AIADMK forms the government


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->