இந்திய பாரா வில்வித்தை இறுதிப்போட்டி; உலக சாம்பியன் ஷீத்தல் தேவியை வீழ்த்தி 18 வயது இந்திய வீராங்கனை பாயல் நாக் சாம்பியன்..!
Payal Nag Crowned Champion in Indian Para Archery Finals Defeating World Champion Sheetal Devi
இந்திய பாரா வில்வித்தையில் உலக சாம்பியனான ஷீத்தல் தேவியை 18 வயது இந்திய வீராங்கனை பாயல் நாக், உலக கோப்பை இறுதிப்போட்டியில் வீழ்த்தி மகுடம் சூடியுள்ளார்.
இன்று நடைபெற்ற பாங்காக் வில்வித்தை பாரா தொடர் 2026-இன் மகளிர் காம்பவுண்ட் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பாயல் நாக் நடப்பு உலக சாம்பியனான ஷீத்தல் தேவியை அதிர்ச்சிக்குள்ளாக்கி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த 02 வில் வீராங்கனைகளும் நாக்-அவுட் சுற்றுகளை அதீத திறமையால் தங்கள் வசமாக்கினர். அதன்படி, அரையிறுதியில் ஷீத்தல், சிங்கப்பூரின் நூர் ஷாஹிதா அலிமை 147–142 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். அதேசமயம், பாயல் நாக் ஐதிமோவாவை 144–140 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
அதன்படி, இன்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான ஷீத்தல் தேவி 136 புள்ளிகளை எடுக்க, கடைசி 02 வாய்ப்பில் 10, 10 புள்ளிகளை அடித்த பாயல் நாக் 139 புள்ளிகளை முடிவில் பெற்று சாம்பியன் ஆனார்.
உலக வீரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஷீத்தல் தேவியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்ற பாயல் நாக் தன்னுடைய திறமையை உலக அரங்கில் பரைசாற்றியுள்ள நிலையில் அவருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Payal Nag Crowned Champion in Indian Para Archery Finals Defeating World Champion Sheetal Devi