விஜயின் கனவுகள் கானல் நீராகும்! - ம.தி.மு.க. தலைவர் வைகோவின் கடும் அறிக்கை..!
Vijays dreams mirage MDMK leader Vaikos strong statement
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க. பொதுக்குழுவில் நடிகர் விஜய் ஆற்றிய உரையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,“பொது வாழ்வில் நெறியறிவும், அரசியல் ஒழுக்கமும் இல்லாதவர் விஜய். கரூர் நிகழ்வுக்குப் பிரதான காரணியாக இருந்தும், அதற்கான பொறுப்பை ஏற்காமல் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடந்த துயரச் சம்பவத்துக்குப் பற்றாக்குறையாகக் கூட வருத்தமோ, குற்ற உணர்வோ அவருக்குள் இல்லை,” என்று வைகோ குற்றம்சாட்டினார்.அவரது அறிக்கையில் மேலும்,“விஜய் காகிதக் கப்பலில் கடல் கடக்க முயல்வது போல அரசியலில் தாறுமாறாகப் பாய்கிறார். ஆகாயத்தில் கோட்டை கட்டும் கனவுகள் இறுதியில் கானல் நீராக மறைந்துவிடும்.
தி.மு.க.வை இழிவுபடுத்தும் அளவுக்கு அரசியல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார். முதலமைச்சரை நோக்கி விஷக் கசப்பை பொழிகிறார். அவரது நடத்தை அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியதாகும்,” என்றும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இறுதியாக,“விஜய் நிதானத்தை இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும். புகழின் மயக்கத்தில் பொதுவாழ்வின் பொறுப்பை மறக்கக்கூடாது,” என்று வைகோ எச்சரித்துள்ளார்.
English Summary
Vijays dreams mirage MDMK leader Vaikos strong statement