விற்பனைக்கா? விநியோக சங்கிலியா? பிடிபட்ட 1.25 கிலோ கஞ்சா! -களக்காடு கஞ்சா வழக்கில் விசாரணை தீவிரம்
For sale Or part supply chain1point25 kg ganja seized Investigation intensifies Kalakkad ganja case
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், களக்காடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பையா, சுரேஷ் (39) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும், சோதனையில், அரசால் தடை செய்யப்பட்டதும் மனித உயிருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனை நோக்கில் அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் சுப்பையா (எ) சுரேஷை கைது செய்தார்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றி, தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
For sale Or part supply chain1point25 kg ganja seized Investigation intensifies Kalakkad ganja case