10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு:அந்த நாள் நடந்தது என்ன? சாட்சிகள் சொன்ன உண்மை! - குற்றவாளிக்கு சிறை - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்த 2015ஆம் ஆண்டு முன் விரோதத்தின் காரணமாக நிகழ்ந்த ஒரு தாக்குதல் வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த அருள்முருகன் (40) என்பவர் அசிங்கமாகப் பேசி, கம்பால் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணை நிறைவடைந்து, இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணை முடிவில், அருள்முருகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங் நேற்று தீர்ப்பு வழங்கி, குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர முக்கிய பங்காற்றிய நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், திருக்குறுங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி, வழக்கை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் (தற்போது ஓய்வு) மற்றும் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்த அரசு வழக்கறிஞர் ஆலன் ராயன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் பாராட்டினார்.

மேலும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை உறுதியாக ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் நோக்கில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Verdict after 10 years What happened day truth revealed by witnesses culprit sentenced prison


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->