தெருநாய் தாக்குதல்களுக்கு Full Stop வைக்குமா நீதிமன்றம்...? இனி சாலைகளில் பாதுகாப்பா...?– மக்கள் கேள்வி - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்வோரை விரட்டி கடிக்கும் சம்பவங்கள் தினசரி தலைப்புச் செய்திகளாகி விட்டன. சமீபத்தில் மணப்பாறை மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் குழந்தைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.

இதனால் மக்கள் நடைபயிற்சிக்கு கூட கம்பு பிடித்து செல்வது வழக்கமாகி விட்டது.இந்த நிலைமையில், தெருநாய் பிரச்சினையை தானாகவே எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த உத்தரவை முன்பு பிறப்பித்திருந்தது. ஆனால் பல மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்த தவறியதால், கடந்த திங்கட்கிழமை தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது, தெருநாய்களுக்கு உணவளிக்க ஒவ்வொரு வார்டிலும் தனி இடம் ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை வளாகங்களில் ஊழியர்கள் தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் விமர்சித்தனர்.

நீதிபதிகள், “தெருநாய் பிரச்சினை தொடர்பான இடைக்கால உத்தரவு நவம்பர் 7 (நாளை) வெளியிடப்படும்” என்று அறிவித்துள்ளனர்.இந்நிலையில், பொதுமக்கள், “நீதிமன்ற உத்தரவால் தெருநாய் தொல்லை குறையுமா? அல்லது இது மீண்டும் காகிதத்தில் முடிவா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will court put full stop to stray dog ​​attacks there safety roads now People Question


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->