நல்லா.. மணமா.. சுவையா.. மொறு மொறுன்னு...! புதினா -கொத்தமல்லி தோசை...!
Mint Coriander Dosa
புதினா - கொத்தமல்லி தோசை
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
தோசை மாவு - 2 கப்
நறுக்கிய புதினா, கொத்தமல்லி - ஒரு கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2 பல்

செய்முறை :
முதலில்,புதினா கொத்தமல்லி தோசை செய்வதற்கு முதலில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
அதன் பிறகு இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். பிறகு கலந்து வைத்துள்ள கலவையை தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து சுட்டெடுக்கவும். சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி.