சொன்னா shock அவீங்க...! சிக்ஸ் பேக் கான்செப்ட் வர காரணமே இவர்தான்...! - உண்மையை உடைத்த ஏ.ஆர். முருகதாஸ்
If you tell me it will shock He reason why six pack concept came about AR Murugadoss broke truth
பிரபல தமிழ் திரையுலக இயக்குனர் ''ஏ.ஆர். முருகதாஸ்'' இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்தில் விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர்,வித்யூத் ஜம்வல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்த இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முக்கியமாக படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே, அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் 'கஜினி' படத்தில் முதலில் அஜித் நடித்தது குறித்து ஏ.ஆர் முருகதாஸ் மனம் திறந்தார்.அவர் தெரிவித்ததாவது, "மிரட்டல் படம் தான் பின்னர் 'கஜினி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மிரட்டல் படத்திற்காக அஜித் சார் சஞ்சய் ராமசாமியாக நடித்த 2 நாள் காட்சிகள் இன்னும் என்னிடம் இருக்கிறது. அதை பார்த்தால் இன்றும் பயங்கர பிரமிப்பாக இருக்கும். அஜித் சார் தான் இந்த படத்திற்கு சிக்ஸ் பேக் வைக்கலாம் என்று யோசனையை முதலில் தெரிவித்தார்.
அப்போ hero சிக்ஸ் பேக் என்கிற கான்செப்ட் கிடையாது.அதன் பிறகு சூர்யா, அமீர் கானிடம் சிக்ஸ் பேக் வைக்கச் சொன்னதும் அஜித் அவர்களால் தான். அதுக்குப் பிறகுதான் hero சிக்ஸ் பேக் என்கிற கலாசாரமே உருவாச்சு" என்ற உண்மையை உடைத்தார்.
English Summary
If you tell me it will shock He reason why six pack concept came about AR Murugadoss broke truth