கேரளாவில் பதற்றம்: கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் மின்கசிவால் புகைமூட்டம்; 04 பேர் உயிரிழப்பு..!
Smoke haze due to electrical leakage at Kozhikode Medical College 04 people have died
கேரளா கோழிக்கோட்டில் அமைந்த மருத்துவ கல்லூரியில் மின்கசிவு ஏற்பட்டதில், இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 04 பேர் மூச்சு திணறி பலியாகியுள்ளனர்.
இது குறித்து அம்மாநில எம்.எல்.ஏ. சித்திக் கூறும்போது, வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நசீரா என்பவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்தபோது, புகைமூட்டம் அதிகரித்த நிலையில், வேறு இடத்திற்கு அவரை கொண்டு செல்ல முயன்றபோது அவர் பலியாகியுள்ளார்.
இந்த சம்பத்தில் அந்த மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் பலரும், மருத்துவ உபகரணங்களுடன் வேறு பகுதிக்கு தூக்கி செல்லப்பட்ட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டுள்ளதாக மருத்துவமனையின் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.
English Summary
Smoke haze due to electrical leakage at Kozhikode Medical College 04 people have died