வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக வழக்கு?! மச்சானை களமிறக்கி உள்ளடி வேலை பாக்கும் ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


வன்னியர் இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்த திமுக தலைவர் ஸ்டாலின் சதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக, இசை வேளாளர் சங்கம் நடத்திய கூட்டத்தில், ஸ்டாலினின் மைத்துனரும், துர்கா ஸ்டாலினின் சகோதரருமான டாக்டர் ராஜமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இருக்கிறார்.  

மேலும் இதே கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுடைய வலதுகரமான திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வன்னியர் இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து வன்னியர் இடஒதுக்கீட்டை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர். மேலும் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். 

உதயநிதி ஸ்டாலின் நிஜம் என்றால், அவரது நிழலானவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பது திமுகவில் உள்ள எல்லோருக்கும் தெரியும். இவரது ஒவ்வொரு அசைவும் உதயநிதி ஸ்டாலினுடையதே ஆகும். இந்த நிலையில் வன்னியர் இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலினின் மைத்துனர் ராஜமூர்த்தி ஆலோசனை நடத்தியிருப்பது திமுகவின் உள்ளடி வேலையாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

 

டாக்டர் ராமதாஸின் 40 வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டினை திமுக தடுத்து நிறுத்த முயற்சி செய்வது வன்னியர்களிடையே கடுமையான கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தேர்தல் பிரச்சார மேடையில் அதிமுக கொண்டு வந்த மசோதாவை நாங்கள் தான் கையெழுத்து போடுகிறோம் என ஸ்டாலின் அறிவித்துவிட்டு, மறுபுறம் மச்சானையும், வளர்ப்பு பிள்ளையாகவே வளர்க்கப்பட்ட திமுக எம் எல் ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் களமிறக்கி வழக்கு தொடக்க ஆலோசனை நடத்தியதை அறிந்த வன்னியர் சமுதாய மக்கள் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin brother in law against vanniyar reservation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->