உறுதியானது அழகிரியின் அரசியல் பயணம்?! எங்கே? எப்போது?! யாரோடு? விரைவில் சந்திப்புக்கு ஏற்பாடு?!
MK Alagiri enter again in politics
தற்போதைய திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி மீண்டும் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக, மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக திமுகவில் கோலோச்சிக் கொண்டிருந்த முக அழகிரி, தனது தந்தையும் கட்சியின் தலைவருமான கருணாநிதியாலே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதற்கு பின்னால் ஸ்டாலினின் உள்ளடி வேலைகள் இருந்ததாக தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனை நேரடியாகவே கடந்த மாதம் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்திய முக அழகிரி தெரிவித்திருந்தார். மேலும் அந்த கூட்டத்தில் மு க ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததுடன், தகுதியே இல்லாத தலைவர் என்றெல்லாம் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனங்களை பார்த்த திமுக தலைமையானது அதிர்ச்சி அடைந்தது. மேலும் நான் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு என்னுடைய ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்திருந்தார் அழகிரி.

இதனையடுத்து உடனடியாக அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில், அழகிரி ஸ்டாலின் சகோதரியான செல்வி, அழகிரியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது என்னப்பா இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்து விட்டாயே என்று கேட்டதற்கு, அப்படி பேசியதால் தானே, இன்று நீங்கள் அழைத்து பேசுறீங்க என்று அழகிரி சூடாகவே பதிலளித்துள்ளார்.
அழகிரியின் பிறந்த நாள் ஜனவரி 30ஆம் தேதி, அழகிரி ஏதாவது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் முக அழகிரி மீண்டும் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் ஸ்டாலினை சந்தித்தும் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான முழு வேலைகளையும் கலைஞர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் முன்னின்று செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
MK Alagiri enter again in politics