இளம் இயக்குநரை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் மடித்த மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனையடுத்து இயக்குநரை அழைத்து நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், அவர் ஊக்கமளித்து பாராட்டி அனுப்பியதாகவும்" ஆதிக் ரவிச்சந்திரன் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth wishes to director aadhik ravichandran


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->