பிரபல நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? உண்மை என்ன? அவரே வெளியிட்ட செய்தி!
Actress Kajal Agarval Accident death fake news
பிரபல நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்தச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இறைவனின் அருளால் நான் நலமாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
மேலும் அவற்றை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரபலங்களை குறிவைத்து தவறான தகவல்கள் பரவுவது அதிகரித்துள்ளது. அதே போல் காஜல் அகர்வாலையும் சுற்றி இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. தற்போது அவர் நேரடியாக வெளியிட்ட விளக்கத்தால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதன் மூலம், இணையத்தில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் நம்பக்கூடாது என்பதையும், வதந்திகளை பரப்புவது சமூக பொறுப்பில்லாத செயலாகும் என்பதையும் அவர் மறைமுகமாக எடுத்துக்காட்டியுள்ளார்.
English Summary
Actress Kajal Agarval Accident death fake news