மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பாங்கு: நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம்: சொல்கிறார் தங்கம் தென்னரசு..!
Tangam Tennarasu says that fair distribution of funds is the true federal philosophy
கோவையில் நடந்து வரும், 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு - 2025' நிகழ்வில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு உறையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நிதி பகிர்வில் மத்திய அரசு, பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்கிறதாகவும், நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை என்றும், நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம் என கூறியுள்ளார். அத்துடன், தமிழகத்தைப் பொறுத்தவரை, திட்டங்கள், செலவுகளுக்காக மூன்றில் இரண்டு பங்கை மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளதாகவும், ஆனால், வருவாய் பங்கீட்டில் மூன்றில் ஒரு பங்கே கிடைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்துக்கு வழங்குவதில்லை. சரி செய்ய முடியாத அளவுக்கு நிதி சிக்கல்களை, தற்போதைய நிதி பகிர்வு முறை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், சமக்ரசிக்ஷா திட்டத்துக்கான 4,000 கோடியை வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பேரிடர் மேலாண்மை நிதியில் ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி மட்டும் வருகிறதாகவும், பேரிடரால் ஏற்பட்ட உண்மையான இழப்புக்கு உரிய நிவாரணம் தருவதில்லை என்றும் குற்றம் சுத்தியுள்ளார்.

மேலும், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான கட்டமைப்பை உருவாக்க, அதிக முதலீடு தேவைப்படும். ஆனால், அதை மத்திய அரசு தருவதில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பதை மாநிலம் தீர்மானித்து வந்தது. ஜி.எஸ்.டி.,க்குப் பின் அது, பறிக்கப்பட்டு விட்டது என்றும் பேசியுள்ளார். ஆனால், மத்திய அரசுக்கு செஸ், சர்சார்ஜ் என கூடுதல் வருவாய் கிடைக்கிறதாகவும், வரி குறைப்புக்கு, சீரமைப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஆனால், உண்மையிலேயே நுகர்வோருக்கு இதன் பயன் சென்றடையும் என்றால் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளதோடு, ஆனால், பாதிக்கப்படுவது மாநிலங்களே. அதற்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜி.எஸ்.டி., அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு ரூ.05 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் எனவும், தமிழகத்தின் வருவாயில் பெரும் பகுதி ஜி.எஸ்.டி.,யில் இருந்து கிடைக்கிறதாகவும், இப்போது திடீரென வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்கள் வாக்களிக்கலாம் என மத்திய நிதியமைச்சர் கூறுகிறார். முடிவெடுத்த பின், ஒப்புதலுக்காகவே கவுன்சில் கூட்டப்படுகிறது. முடிவெடுக்கும் முன், மாநிலங்களிடம் ஆலோசிக்கலாமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடந்து, நிதி பகிர்வில் மத்திய அரசு, பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்கிறதாகவும், நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை என்றும், நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Tangam Tennarasu says that fair distribution of funds is the true federal philosophy