ஹோண்டா லிவோ 2025 – லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ்.. ரூ.77 ஆயிரம் மட்டுமே.. புதிய ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்! 
                                    
                                    
                                   Honda Livo 2025  65 km per liter mileage only Rs 77 thousand New Honda Livo bike launched
 
                                 
                               
                                
                                      
                                            ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான லிவோ 2025 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியன்ட்களில் வெளியான இந்த பைக், சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வேரியன்ட் & விலை:
டிரம் பிரேக் வேரியன்ட் – ₹77,492, டிஸ்க் பிரேக் வேரியன்ட் – ₹80,059
இந்த விலைப் பட்டியலில், குறைந்த பட்ஜெட்டில் நம்பகமான பைக் தேடுபவர்களுக்கு லிவோ 2025 ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
 இன்ஜின் & செயல்திறன்:
ஹோண்டா லிவோ 2025 பைக்கில் 109.51cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.7 bhp சக்தியும், 9.3 Nm டார்க்கும் வழங்குகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலம் மென்மையான மற்றும் சீரான பயண அனுபவம் கிடைக்கிறது.
மைலேஜ் & எரிபொருள் திறன்:
ஹோண்டா லிவோ 2025, நிஜ வாழ்க்கை பயணத்தில் லிட்டருக்கு 60 முதல் 65 கி.மீ. வரை மைலேஜ் தருகிறது. 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கின் மூலம், ஒருமுறை நிரப்பினால் 600 கி.மீ. வரை பயணிக்கலாம். இதில் உள்ள eSP (Enhanced Smart Power) தொழில்நுட்பம் எரிபொருள் சிக்கனத்தையும், இன்ஜின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது.
முக்கிய அம்சங்கள்:
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
ECO இன்டிகேட்டர் & சர்வீஸ் ரிமைண்டர்
CBS (Combi Braking System)
சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் வசதி
முன்புற டிஸ்க், பின்புற டிரம் பிரேக்குகள்
ஹோண்டா லிவோ 2025, நகர்புற மற்றும் தினசரி பயணங்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, நம்பகமான மற்றும் மைலேஜ் மாஸ்டர் பைக்காக திகழ்கிறது. திடமான வடிவமைப்பு, நவீன அம்சங்கள், குறைந்த பராமரிப்பு ஆகியவற்றால் இது இந்திய மார்க்கெட்டில் சிறந்த 110cc பைக்குகளில் ஒன்றாக திகழ்கிறது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Honda Livo 2025  65 km per liter mileage only Rs 77 thousand New Honda Livo bike launched