ஓராண்டு முழுவதும் இலவசம்! ஓபன் ஏஐ இந்திய பயனாளர்களுக்கு சாட்ஜிபிடி கோ சேவை அறிமுகம் - Seithipunal
Seithipunal


ஏற்கனவே இணைய உலகில் அதிரடியாக செறிந்துள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தளங்கள், தற்போது வலுவான ஆதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி, எக்ஸ் தளத்தின் குரோக், பிரெப்ளெக்சிட்டி போன்ற முன்னணி AI நிறுவனங்கள் சந்தையில் தலைசிறந்த இடத்தை பிடித்து உள்ளன.

போட்டியாளர்களுடன் முனைப்புடன் போட்டியிடவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், AI நிறுவனங்கள் தனித்துவமான சலுகைகள் மற்றும் புதுமையான சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.அதன் தொடர்ச்சியாக, ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரீமியம் ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனாளர்களுக்காக ஒரு வருடம் முழுவதும் இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், முன்பு மாதம் ரூ.399க்கு கிடைக்கும் சேவையை, இப்போது எந்த செலவுமின்றி அனுபவிக்க முடியும். இலவச சேவையிலும் தரமான, விரிவான தகவல்கள், புகைப்படங்கள், வரைவுகள் மற்றும் அதிவேக செயலாக்க வசதிகள் போன்ற பல மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்தக்கூடும்.

இந்த அறிவிப்பை பெங்களூரில் இன்று நடைபெறவுள்ள ‘ஓபன் ஏஐ’ சிறப்பு நிகழ்வுடன் ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் தெரிவித்ததாவது, இந்தச் சலுகை மூலம் இந்தியர்கள் மேம்பட்ட AI சேவையை எளிதாக அணுகி, புதிய யுகம் தொழில்நுட்ப அனுபவத்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OpenAI launches ChatGPD Go service Indian users free whole year


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->