இந்தியாவில் டிக்-டாக் தடை நீக்கமா? மத்திய அமைச்சர் சொன்ன தகவல்!
Tik Tok banned indian govt update
சீனாவின் பிரபல வீடியோ செயலியான டிக் டாக்கிற்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக, இந்திய அரசு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபரை சந்தித்ததையடுத்து, இந்தியா-சீனா உறவுகளில் மாற்றம் ஏற்பட்டதாக கருதப்பட்டு, டிக் டாக் மீதான தடையை நீக்கும் வாய்ப்பு உள்ளது என்ற செய்தி பரவியது. இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “டிக் டாக் மீதான தடை தொடர்கிறது. அதை நீக்க எந்தத் திட்டமும் தற்போது அரசிடம் இல்லை. இதுவரை எந்த அமைப்பிலிருந்தும் அல்லது தரப்பிலிருந்தும் தடையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரைகளும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், இந்தியாவில் டிக் டாக் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு தெளிவாகியுள்ளது.
English Summary
Tik Tok banned indian govt update