தமிழகக் காவல்துறையில் அதிரடி மாற்றம்: 70 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; 34 பேருக்குப் பதவி உயர்வு!
tamilnadu police ips transfer 2026
தமிழகக் காவல்துறையின் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மாற்றத்தில் 34 அதிகாரிகள் பதவி உயர்வுடன் கூடிய புதிய பொறுப்புகளைப் பெற்றுள்ளனர்.
முக்கியப் பொறுப்புகளும் நியமனங்களும்:
மகேஷ்வர் தயாள்: சிறைத் துறை கூடுதல் டிஜிபி-யாக இருந்த இவர், தற்போது சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட்சன் தேவாசீர்வாதம்: சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த இவர், பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரேம் ஆனந்த் சின்ஹா: தென் மண்டல ஐஜி-யாக இருந்த இவர், கூடுதல் டிஜிபி-யாகப் பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்ணன்: தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக இருந்த இவர், கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயேந்திர பிதாரி: சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் பொறுப்பிலிருந்து தென் மண்டல ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கர்: ஆவடி ஆணையராக இருந்த இவர், தற்போது சிறைத் துறை கூடுதல் டிஜிபி-யாக மாற்றப்பட்டுள்ளார்.
அதே பிரிவுகளில் பதவி உயர்வு:
சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாக தேவி ஆகிய இருவரும் டிஜிபி-யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே பிரிவுகளில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 70 அதிகாரிகளும் அடுத்த ஓரிரு நாட்களில் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu police ips transfer 2026